பிரிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்காமைக்கு காரணம் கோரும் எதிர்க்கட்சி
பிரேசில், ரஷ்யா இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான குறித்த அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கவேண்டாம் என்ற எந்தவொரு வெளிநாட்டு சக்தி கூறியதா என்றும் அந்தக்கட்சி கேட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
முக்கியமான உச்சி மாநாடு
பிரிக்ஸ் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பித்திருப்பது மகிழ்ச்சியான விடயமாகும். எனினும், ஜனாதிபதிமற்றும் வெளிவிவகார அமைச்சர் இருவரும் உச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
இந்தநிலையில் அரச தலைவர்கள, முக்கியமான உச்சி மாநாடுகளில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தில் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கை இலங்கைக்கு இன்றியமையாதது என எரான் விக்கரமரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரிக்ஸ் அமைப்பின் 2024ஆம் ஆண்டுக்கான மாநாடு ரஷ்யாவில் அக்டோபர் 22 முதல் 24 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
