நாட்டில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, மக்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.
அத்தோடு, இந்த வன்முறைச் சம்பவங்கள் நீண்டு சென்றால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும் எழுகின்றது.
மேலும், சட்டம், ஒழுங்கு விடயத்தில் தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி..
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri