போர் நிறுத்த பேச்சுவார்த்தை: இஸ்ரேல் - பிரான்ஸ் உறவில் தொடர் விரிசல்
ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் தரப்புக்கு இடையே நீடிக்கும் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் ஒருதலைப்பட்சமாக எதிர்ப்பதாக பிரான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியவுடன் பிரான்ஸுடனான உறவில் இருதரப்பு விரிசல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தத்தை எட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையேயான முறுகல் மேலும் வலு பெற்றுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர்
இந்நிலையில், நேற்று செவ்வாயன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையே தொலைபேசி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல்களைத் தடுக்க ஹிஸ்பொல்லாவுக்கு எதிராக செயல்படுவதைத் தடுக்கும் எந்த ஏற்பாட்டையும் இஸ்ரேல் ஏற்காது" என்று மக்ரோனிடம் நெதன்யாகு தெளிவுபடுத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய மோதல் மக்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும என்று மக்ரோன் நெதன்யாகுவை எச்சரித்ததாகவும், போர் நிறுத்தத்தின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியதாகவும் பிரான்ஸ் அரண்மனை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |