மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்களில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மகிழ்ச்சியில் நாமல்

Fuel Price In Sri Lanka Mahinda Rajapaksa Namal Rajapaksa Government Of Sri Lanka
By Rakesh Aug 31, 2026 04:17 AM GMT
Report

அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கடுமையான முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தை காக்கும் முதன்மை மையங்கள் என தங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹர பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்கள்

"2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்தங்கிய நிலையிலிருந்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அது மகிந்த ராஜபக்சவுக்கு அம்புல் தியல் கொண்டு செல்வதற்காகவே என எதிர்த்தரப்பினரால் ஏளனம் செய்யப்பட்டது. ஆனால், இன்று அதே நெடுஞ்சாலையில் வாகனங்கள் நெரிசலாகப் பயணிப்பதைக் காணமுடிகின்றது.

மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்களில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மகிழ்ச்சியில் நாமல் | Opposition Party Mocked Mahinda Namal Is Proud

மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் உமா ஓயா போன்ற திட்டங்களை அன்று எதிர்த்தவர்களே இன்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவை அவசியம் என்று ஒப்புக்கொள்கின்றார்கள்.

எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வறட்சியால் நீர்நிலைகள் வற்றியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எதிர்க்கட்சியையும் ராஜபக்சர்களையும் குறை கூறிக்கொண்டிருந்ததே தவிர, நீர்நிலைகளைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் மீது கடுமையான வரிச்சுமை

மேலும், அறுவடைக்காலத்தில் அரிசி மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேனைப் பயிர்ச்செய்கைக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆட்சியைப் பிடித்த நாள் முதல் மக்கள் மீது கடுமையான வரிச்சுமையைச் சுமத்தி அரசு துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்களில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மகிழ்ச்சியில் நாமல் | Opposition Party Mocked Mahinda Namal Is Proud 

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்துக்குக் காரணங்களைக் கூறும் அரசு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறைமுக மற்றும் நிதி அமைச்சுசார் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்களித்துவிட்டு, இன்று வேலை கேட்டுச் செல்லும் இளைஞர்களை அரசு விரட்டியடிக்கின்றது. பொதுவாகக் காலப்போக்கில் தான் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படும்.

ஆனால் இந்த அரசுக்கோ ஆட்சிக் கட்டிலில் ஏறிய நாளிலிருந்தே மக்களைப் பிடிக்காமல் போய்விட்டது. இனியாவது பொய் கூறுவதையும் மக்களை ஏமாற்றுவதையும் அரசு நிறுத்திவிட்டு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து முன்நின்று போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்

பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்

 

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணநாயக்க

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணநாயக்க

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US