ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான ஆசு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் கூறுகையில்,
"அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதுடன் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை.
எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் என்பது உறுதி. ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும்.
நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.
ஆகவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார்.
ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலையே முதலில் கோருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
