முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது துக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (20.05.2024) இடம்பெறுள்ளது.
ரெட்பானா விசுவமடு பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
வள்ளிபுனம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற குறித்த ஹெண்டர் ரக வாகனம் தேராவில் வன இலாகாவிற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது நேற்று (19) அதிகாலை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
@tamilwinnews சூட்சுமமான முறையில் மரகடத்தல் முயற்சி #lankasrinewss #Tamilwinnews #Srilanka #News #jaffnaboy ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இதன்போது, ஹெண்டர் ரக வாகனத்திற்குள் தண்ணீர் போத்தல்கள், ஊதுபத்தி ,வெற்று பெட்டிகளை கொண்டு மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட துண்டங்களாக போடப்பட்ட பாலை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் ஹெண்டர் ரக வாகனத்துடன் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக தகவல் : ராயூகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam