இறைவரி திணைக்களத்திற்கு படையெடுக்கப் போகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
தேசிய இறைவரித் திணைக்களத்தில் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளனர்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேரினதும் வரி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கும் அவை குறித்து ஆராய்வதற்கும் எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக் கொள்ள
வரி ஆவணங்களை தெரிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் இந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சி ஏற்கனவே தனியாக ஒரு குழுவை நியமித்துள்ளது.
அந்த குழுவில் சட்டத்தரணிகளும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை துணைகள் வரி செலுத்துதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது சொத்துக்கள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள்
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடமும் எதிர்க்கட்சிகள் விண்ணப்பங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 100இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இவ்வாறு இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதனால் இதற்கான தகவல்களை வழங்குவதில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
