கார்ல்டனுக்கு குடிப்பெயர்ந்த மகிந்தவை சந்தித்த எதிர்க்கட்சி உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, சமீபத்தில் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெராச்சியும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது
முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, அவரது நலம் விசாரித்து, சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி கடந்த 11ஆம் திகதி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இல்லாது செய்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் புதன்கிழமை (10) நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் மகிந்த, விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பல அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மகிந்தவை சென்று சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



