புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட வெட் வரியை குறைக்குமாறு கோரிக்கை
புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18வீத பெறுமதி சேர் வரி, வாசகர்களுக்கு சலுகை விலையை வழங்குவதற்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கச் செயலாளர் லசிதா உமகிலியா இதனை தெரிவித்துள்ளார்.
உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்
இதன்போது நிகழ்விற்கு வருகை தந்த பார்வையாளர்கள் புத்தகங்கள் மீதான பெறுமதி சேர் வரியைக் குறைக்கக் கோரும் பொது மனுவில் கையெழுத்திடுமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கண்காட்சி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புத்தக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு குறைந்திருந்துள்ளன. எனினும், வெட் என்ற பெறுமதி சேர் வரி காரணமாக, வெளியீட்டாளர்கள் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்க முடியாதுள்ளதாக உமகிலியா குறிப்பிட்டுள்ளார்.
புத்தகங்கள் தற்போது 20.5வீத மொத்த வரிச் சுமைக்கு உட்பட்டுள்ளன, இதில் 18வீத வெட் மற்றும் 2.5வீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவை அடங்கும்.
இது ஒரு புத்தகத்தின் விலையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும் என்று சங்கத் தலைவர் சமந்தா இந்தீவரா கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



