தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்
கொழும்பிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்
இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.