எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை
எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி கோரியுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் மக்களின் உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமையல் எரிவாயுவின் கலவையில் செய்யப்பட்ட மாற்றமே இவ்வாறு சிலிண்டர்கள் வெடிப்பதற்கான காரணம் என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் என ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கொள்வனவு செய்யும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்பொழுது வெத்துச் சிதறுவதாகக் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு எதிர்க்கட்சியினால் செய்யப்பட்டது அல்ல எனவும் இது அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையின் அடிப்படையிலானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென ஹேஷா தெரிவித்துள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
