மொட்டுக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அந்த கட்சிக்குள் எதிர்ப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் சம்பந்தமாக அந்த கட்சியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பை முன்வைத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து நடைபெறும் கட்சியின் கூட்டத்தின் போது, கட்சிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் சம்பந்தமாக இவர்கள் யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மாற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இவர்கள் ஏற்கனவே கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் மூத்த உறுப்பினர்கள் சிலர் மாத்திரமல்லாது இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவர்களில் அடங்குவதாக பேசப்படுகிறது.
அரசாங்கத்தில் பிரதான பதவி ஒன்றை வகிக்கும் மூத்த அமைச்சரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
