கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற முறைகேடுகள் : விசாரிக்க விசேட ஆணைக்குழு
கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பட்டய கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.
குற்றங்களை விசாரிக்க...
இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்குள் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடி, குற்றவியல் நம்பிக்கை மோசடி மற்றும் சொத்துக்களை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றங்களை விசாரிக்க இந்த ஆணையகம் பணிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam