கொழும்பில் 16 வயது யுவதி மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியில் யுவதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரணங்கர வீதியில் உள்ள போதியாவத்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 16 வயது யுவதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு துப்பாக்கிதாரிகள்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தங்கள் இலக்கைத் தவறாக மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் உண்மையான இலக்கு, குறி வைக்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீடு என்று நம்பப்படுகிறது. காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.