பொதுஜன பெரமுனவுக்குள் பிரதமருக்கு எதிர்ப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன் டொலர் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கூறியிருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

எனினும் இதுவரை 5 பில்லியன் டொலர்களை மாத்திரமல்ல, டொலர்கள் எதனையும் நாட்டுக்கு கொண்டு வர பிரதமர் தவறியுள்ளதாக கூறியே பொதுஜன பெரமுனவுக்குள் இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், அடுத்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பிரதமரிடம் இது குறித்து கேள்விகளை எழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam