தெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தில் இரவு நேர சுற்றுலா!
பதுளை மற்றும் தெமோதரவுக்கு இடையிலான புகையிரத பாதையில் காணப்படும் தெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தினை இரவு நேரத்திலும் சுற்றுலாப்பணிகள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக இலங்கை தொடருந்து திணைக்களம் மற்றும், மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து இதற்கான புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இதன்படி குறித்த திட்டத்தில், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிடும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து திணைக்களம்
இத்திட்டம் எதிர்வரும், 2025 ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக என்று தொடருந்து திணைக்களம்அறிவித்துள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம், ஒன்பது வளைவு பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த பின்னர்,பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் அறவிடப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் உள்றாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

என் பிள்ளைகள் எனக்கு வேண்டும்... கர்நாடகா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் கோரிக்கை News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
