சர்வதேச தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களை கொண்டவர்கள் தேவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் H-1B விசா விண்ணப்பங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 100,000 டொலர் விண்ணப்பக் கட்டணத்தை விதித்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமையான தொழிலாளர்கள்
அத்துடன், அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லை எனவும் அவர்கள் அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசா முறையை அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் புதுமை நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து அதிக திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பயன்படுத்துகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam