பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்
நாடாளுமன்ற விவாதங்களை பார்ப்பதற்கு பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக்கூட்டங்கள் நடக்கும் தினங்களில் நாடாளுமன்றத்தை பார்வையிடவும் விவாதங்களை பார்வையிடவும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
படைக்கல சேவிதரின் யோசனை
நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய நாடாளுமன்ற அவையில் பொது பார்வையார்கள் அரங்கில் அமர்ந்து நாடாளுமன்ற விவாதங்களை நேரில் பார்க்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
கோவிட் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
கோவிட் தொற்று நோய் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பார்வையிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்களுக்கு நாடாளுமன்ற விவாதங்களை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
