பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு கடூழிய சிறைத்தண்டனை
பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதற்காக காத்திருந்த 9 வயது சிறுமியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 குற்றச்சாட்டுகளுக்காக, வயதான வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சப்புவிட்ட நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், 30,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டது.
கடுங்காவல் சிறைத்தண்டனை
அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்தப்படாவிட்டால், தண்டனைக்கு கூடுதலாக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு சிறிய தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்.
கொடூரமான குற்றம்
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கொடூரமான குற்றம் நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் 55 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
மஹரகம பொலிஸாரினால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தாக்கல் செய்தார்.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
