இரவல் பெறும் மகிந்த குடும்பம்.. சர்ச்சையை கிளப்பும் நாமலின் சொத்து விவகாரம்
நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்சவின் சொத்து விவகாரம் தற்போது அரசியல் பரப்பில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச சமர்ப்பித்திருந்த சொத்து விபரம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தன்னிடம் உள்ள தங்க நகைகள் எல்லாம் தங்களது குல தெய்வங்கள் மற்றும் எனக்கு பரிசாக கிடைக்கப் பெற்றவை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மற்றைய மகனான யோஷித ராஜபக்ச, தங்களிடம் எந்த சொத்துக்களும் இல்லை என கூறியுள்ளார்.
எல்லோரும் நினைப்பது போல் எங்களிடம் பெரிதாக எதுவும் இல்லை எனவும் கார் கூட இல்லை எனவும் அவற்றை நாங்கள் பிறரிடம் இருந்து பெற்றே பயன்படுத்துகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருவரின் இந்த மாறுபட்ட கருத்துக்கு மத்தியில், நாமல் ராஜபக்ச சமர்ப்பித்த சொத்து விபரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

தொல்லியல் திணைக்கள விவகாரத்தில் வலி. கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் - தவிசாளரிடையே தர்க்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
