சிங்கராஜா வனப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை
சிங்கராஜா (Singaraja) வனப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக வன வள பாதுகாப்பு அதிகாரி நிஷாந்த எதிரிசிங்க (Nishantha Edirisinghe) தெரிவித்துள்ளார்.
வன அழிவு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு நடவடிக்கை
காடு முழுவதும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 100இற்கும் மேற்பட்ட வன வள பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த அதிரடி வேலைத்திட்டமானது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும்.
மேலும், உலகத்தின் பாரம்பரியச் சின்னமான சிங்கராஜாவைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |