மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்: பாடசாலை மாணவன் பலி
ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (19.04.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கலடன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் ஓட்டுனரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஓட்டுனரான மாணவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
