யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான இரண்டுபாதைகள் திறக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M.Charles), யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 07ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு அமைவாகவே இந்த வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.
துப்பரவு செய்யும் பணிகள்
இதன்படி பொன்னாலை - பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும் வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடாகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கக்கட்டுள்ளது.

இதிவ் வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது.
இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஏனைய மக்களும் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு பணிகளை ஆரம்பிக்க மிக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri