சீரற்ற காலநிலை! தாழ்நிலப் பகுதியில் வெள்ளம் எற்படும் அபாயம்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், இன்று காலை தெதுறு ஓயாவின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வான் கதவுகள் திறப்பு
இதேவேளை தெதுறு ஓயாவின் வான்கதவுகளை வினாடிக்கு 16,000 கன அடிக்கு மேல் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக புத்தளம் மற்றும் ஹலவத்தை மாவட்டத்தில் தெதுறு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நீர்பாசனத் திணைக்களத்தின் அறிக்கை
இதேவேளை, ராஜாங்கனை மற்றும் யான் ஓயா உள்ளிட்ட 10 நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெதுறு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் இன்று (25) மாலைக்குள் சிறு அளவில் வெள்ளம் ஏற்படும் எனவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, இது குறித்து அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் நீர்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



