நுவரெலியா ஹக்கல பூங்காவை மீண்டும் திறப்பது தொடர்பான அறிவிப்பு
ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா நேற்று (25.12.2025) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு
பூங்காவில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகள், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளம் மற்றும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள பூங்காவிற்குச் செல்லும் வீதி போன்ற பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான, குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பில் பூங்கா அதிகாரிகளுக்கு பொருத்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட பகுதிகள்
அத்துடன், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் அவதானிக்கப்பட்ட நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளம் மற்றும் வனப் பூங்காவிற்குச் செல்லும் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் பூங்கா உள் பகுதியில் நிலத்தில் வெடிப்புக்கள், நிலத்தாழிறக்கம், நிலத்தில் குழிகள் ஏற்படுதல், மரங்கள் செடிகொடிகள் சாய்தல் மற்றும் புதிய நீரூற்றுக்கள் உருவாகுதல் போன்றவை தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகின்றனர் .

அத்துடன் சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க எச்சரிக்கை பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு, பூங்கா ஊழியர்களால் விசேட உதவித் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்கெனவும் அதிக பாதுகாப்பு ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - திவா
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri