டக்ளஸ் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மன்னார் மாவட்ட அலுவலகம் நேற்றைய தினம் (20)காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைக்கப்பட்ட குறித்த அலுவலகத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோர் இணைந்து வைபவரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
கட்சியின் கிளை அலுவலகம்
நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளை அலுவலகம் இயங்காத நிலையில் நேற்றைய தினம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்
திலீபன்,வைத்தியர் கதிர்காமநாதன்,ஈ.பி.டீ.பி கட்சியின் மாவட்ட
இணைப்பாளர்கள்,இளைஞர் அணி தலைவர்,செயலாளர் பிரதேச இணைப்பாளர்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்







950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
