மழை காரணமாக 3 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் பல இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 3 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.
குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் மூன்று அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளன.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் கூறியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri