மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே இன்று மாலை (25) குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வான் கதவு திறப்பு
அத்துடன் தொடர்ந்து மழையுடனான வானிலை தீவிரமாகும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளையும் தானாகவே திறப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் மற்றும் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.



