அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர் கைது
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் நவம்பர் 4 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் அங்கிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் மீட்டியாகொடை பிரதேசத்தில் வைத்து நேற்று(24) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “மஹதுரு இசுரு” என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.