மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி, மதுபான விற்பனையகங்களை திறப்பதற்கான முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய சுயதொழில் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் மூலம் அவர்கள் மது விற்பனையகங்களை திறப்பதைத் தடுக்க இடைக்கால தடை உத்தரவைக் கோரியுள்ளனர்.
நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனையகங்களும் செயல்பட அனுமதி இல்லை என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நாடு முழுவதும் மது விற்பனையகங்களை திறப்பது, தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டங்களை மீறுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்புள்ள காவல்துறை மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் அதைத் தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை என்று மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனையடுத்து, குறித்த மனுவை ஒக்டோபர் 4 ஆம் திகதி அழைக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam