வழமைக்குத் திரும்பும் ஹோர்முஸ் நீரிணை வழியான ஏற்றுமதி
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரினால் மூடப்பட்டிருந்த உலக புகழ்பெற்ற ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப் போக்குவரத்து தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்கும் வகையிலும், விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும் வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தினசரி எண்ணெய் உற்பத்தியை மேலும் நாளொன்றுக்கு188,000 பீப்பாய்களாக அதிகரிக்க OPEC+ கூட்டமைப்பு உடன்பாடு கண்டுள்ளது.
OPEC+ கூட்டமைப்பு உடன்பாடு
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சவூதி அரேபியா, குவைத், ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெப்ரவரி மாதம் தினசரி 42.77 மில்லியன் பீப்பாய்களாக இருந்த உற்பத்தி, மே மாதத்தில் 33.13 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் சமரச முயற்சிகள் மற்றும் வொஷிங்டன் - தெஹ்ரான் இடையிலான தற்காலிக அமைதி உடன்படிக்கை காரணமாக எண்ணெய் வர்த்தகம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
தற்போது சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 72 டொலராகக் குறைந்துள்ளது (இது போருக்கு முந்தைய விலையாகும்).
இதற்கிடையே, உற்பத்திக் கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) கடந்த மே மாதம் OPEC+ அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியள்ளது.
அதேநேரம், ஈராக் தனக்கான உற்பத்தி இலக்குகளை அதிகரிக்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே, ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட 7 முக்கிய நாடுகள் இந்த உற்பத்தி அதிகரிப்பு முடிவை எட்டியுள்ளன.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam