கனடாவில் புலம்பெயர் தமிழ் அமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ள இலவச பயிற்சி திட்டம்
மின்வாகன உற்பத்தி மற்றும் இருவிசை (hybrid) வாகன உற்பத்திக்கு மாறுவதற்கு உறுதுணையாக வாகன உற்பத்தித்துறைத் தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் பொருட்டு முதல்வர் டக் ஃபோர்டின் ஒன்ராறியோ அரசு 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன உற்பத்தித்துறையில் ஒன்ராறியோ மாநிலத்தை உலகில் வலுவான முன்னணி நிலையில் வைப்பதற்கு இம்முயற்சி உதவுவதுடன் மின் வாகன உற்பத்தித்துறையின் கட்டண அதிகரிப்புகளுக்கு மத்தியிலும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வாகன உற்பத்தித்துறை
"வாகன உற்பத்தித்துறையில் ஒன்ராறியோ முன்னணி வகிக்கிறது. இது எமது தொழிலாளர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு வேண்டிய தொழில்சார் திறனைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது" என அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவின் வாகன உற்பத்தித்துறையில் 700,000 இற்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிலையில், இம் முதலீடானது உலகளாவிய வர்த்தக சவால்களையும் போட்டி நிலையையும் தொழிலாளர்கள் எதிர்கொள்வதற்கும் அதற்கு ஈடுகொடுக்கும் நிலையிலும் அவர்களை வைத்திருக்க உதவும்.
இந்த நேரடி பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம், தொழிலாளர்கள் வேகமாக வளர்ந்து வரும் துறையில் சிறந்து விளங்கத் தேவையான நிபுணத்துவத்தைப் பெறுவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
