நீதிமன்றத்தை அவமதித்த பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!
2025 மார்ச் 28 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகொட, குறித்த பெண் சட்டத்தரணியின் மீது வழக்கை தொடர்ந்துள்ள நிலையிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம்
குறித்த சட்டத்தரணி, நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமல் நுழைந்ததாக, அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது உரிய மரியாதை காட்டாததற்கு சமம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 7 ஆம் திகதியன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கான பிணை விசாரணைக்காக, குறித்த பெண் சட்டத்தரணி முன்னிலையானபோது, மரியாதை இல்லாமல் நடந்துக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்ட பெண் சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது அவருக்காக பிணைக் கோரிய போதும், நீதிமன்றம் அதனை மறுத்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri