சர்ச்சைக்குரிய ONMAXDT நிறுவனத்தின் மோசடி: வீடுகளை சுற்றிவளைத்த மக்கள்
இரத்தினபுரியில் சர்ச்சைக்குரிய ONMAXDT என்ற பெயரில் இயங்கும் பிரமிட் வலையமைப்பில் பணம் வைப்பிலிடப்பட்ட பிரதேசவாசிகள் சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்பிலிபிட்டிய, அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் பிரதேசவாசிகளிடம் பணம் பெற்ற முகவர்களின் வீடுகளை சுற்றிவளைத்துள்ளனர்.
அகுனுகொலபலஸ்ஸ, லுணுகம்வெஹர பிரதேசங்களில் உள்ள முகவர்களின் வீடுகள் இன்று சோதனையிடப்பட்டுள்ளன.
பண மோசடி
நாளுக்கு நாள் பணம் தருவதாக கூறி ஏமாற்றி இந்த முகவர்களால் பணம் பெற்றவர்களை தவிர்த்து வருவதாக சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பண வைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், பெருமளவிலான மக்களின் பணத்தை அபகரித்துள்ள சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள், பணம் மற்றும் பணத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வேறு நபர்களின் பெயரில் உள்ள கணக்குகளில் அல்லது இரகசியமாக மறைத்து வைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
எனினும் மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
