நாட்டைக் கட்டியெழுப்ப எங்களால் மட்டுமே முடியும்! சுனில் பியன்வில எம்.பி
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் அதிகாரத்தைக் கையளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி, தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகளிடம் அதிகாரத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக அதைக் கைப்பற்றவில்லை, மாறாக வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே அதைக் கைப்பற்றியுள்ளது.
தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தேசிய மக்கள் சக்தி கட்சி
'எங்களால் மட்டுமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். நாங்கள் இந்த அதிகாரத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கைப்பற்றவில்லை. எங்களுக்குப் பிறகு இந்த நாட்டை நேசிக்கும் எங்கள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரத்தை நாங்கள் வழங்குவோம்.
கடந்த காலத்தில் நாடாளுமன்றமும் நகராட்சி மன்றங்களும் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரம் கைமாறும் முறையில் உருவாக்கப்பட்டிருந்தபோதிலும், இன்று சாதாரண ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளே அந்த இடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இரண்டு முதல் ஆறு மாதங்களில் அரசாங்கம் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பிரச்சாரம், தங்கள் கட்சி உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு பொய்யான முழக்கமேயாகும்.
இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்பதை அடிமட்ட அளவில் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தனிப்பட்ட சலுகைகளுக்காகவோ அல்லது நலன்களுக்காகவோ வரவில்லை.
நாளை நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவையில் ஏற்படவுள்ள பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரம்
எங்கள் கட்சியில் உள்ள புகழ்பெற்ற பொது அதிகாரிகள், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் அதிக ஊதியம் பெறும் பதவிகளைக் கூட விட்டுவிட்டு, நாட்டிற்குத் தாமாக முன்வந்து சேவை செய்கிறார்கள்.மக்கள் விரும்பும் ஒரு அழகான நாட்டை உருவாக்குவதே அவர்களின் ஒரே நோக்கம்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில், எந்தக் கட்சியைச் சேர்ந்த திறமையான, திருடாத மற்றும் மோசடி செய்யாத நபர்களை ஈடுபடுத்த அரசாங்கம் தயாராக இருந்தாலும், மற்ற கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் கட்சியில் நாடாளுமன்றத்தில் இணையும் 'கட்சி தாவும் கலாச்சாரத்தை' அனுமதிக்க மாட்டேன்.
எதிர்காலத்தில் இதற்காக ஒரு புதிய மசோதாவைக் கொண்டுவர உள்ளோம். விளையாட்டு மற்றும் கலைகள் உட்பட அனைத்துத் துறைகளையும் வலுப்படுத்துவதன் மூலம், இந்த நாட்டை உலகின் சிறந்த நாடாக மாற்றுவதற்குத் எங்களது அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri