இலங்கை பெருந்தொகை கடன் பெற நேரிடும்..! பேராசிரியர் எச்சரிக்கை
வெளிநாட்டு நாணய மாற்று வீத இடைவெளியை நிரப்புவதற்காக, இலங்கை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் திரட்ட வேண்டியிருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் சர்வதேச நிதிச் சந்தைக்குச் சென்று, பிணைமுறிகளை வழங்குவதன் மூலம் டொலர்களை திரட்ட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் வட்டி செலுத்த நேரிடும்
சர்வதேச நாணய நிதியத்தின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மறுஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அதிகளவிலான பொருளாதார அபாயங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கடன் பெறும் போது கூடுதல் வட்டி செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தக் கடனைப் பெறும்போது இலங்கை 11% முதல் 13% வரையிலான மிக உயர்ந்த வட்டி வீதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நிதிச் சந்தையிலிருந்து இந்தத் தொகையைத் திரட்ட முடியாமல் போனால், அடுத்த ஆண்டில் (2027) இலங்கை மீண்டும் குறுகிய கால அடிப்படையிலாவது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு திட்டத்திற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் எனவும் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க மேலும் எச்சரித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO