பதவி விலகல் குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்! - நிமல் சிறிபால டி சில்வா
பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் மூலம் மாத்திரமே பதவி நீக்க முடியும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கு மாற்று எதுவும் இல்லை எனவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக ஒரு ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பதவி விலகுவதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
