பயணக்கட்டுப்பாடுகளை மீறி செயற்படும் பலமிக்கவர்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
வறிய அப்பாவி மக்கள் மாத்திரமே பயணக் கட்டுப்பாட்டு சட்டங்களைச் சரியாகப் பின்பற்றுவதாகவும் அதிகாரம் படைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அன்றாடம் வருமானத்தைப் பெற்று வாழும் அப்பாவி மக்கள் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியிலும் வீடுகளிலிருந்தவாறு பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மதித்து வருகின்றனர்.
பணமுள்ள பலமிக்கவர்கள் பயணக் கட்டுப்பாடுகளை மீறி தமது பலத்தைக் காண்பித்து வீதிகளில் பயணிக்கின்றனர்.
தமது பலத்தைக் காண்பிக்கும் நபர்களால், நாட்டில் கோவிட்டை கட்டுப்படுத்துவதில் தடையேற்பட்டுள்ளது.
எனினும் 60 வீதமான மக்கள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வருகின்றனர்.
எவ்வாறாயினும் அடையாளம் காணப்பட்டு வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அந்தளவுக்கு நல்ல அடையாளம் அல்ல எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam