பிரித்தானியாவில் முடிவுக்கு வருகின்றது £20 மற்றும் £50 நாணயப் புழக்கம் - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் £20 மற்றும் £50 காகித நாணயங்களை செலவழிக்க இன்னும் 100 நாட்களே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது புழக்கத்தில் இருக்கும் £20 அல்லது £50 காகித நாணயங்களை செப்டம்பர் இறுதிக்குள் செலவழிக்க வேண்டும் அல்லது வைப்பிலட வேண்டும் என்று இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.
தற்போது 163 மில்லியன் £50 ரூபாய் காகித நாணயத் தாள்கள் மற்றும் சுமார் 314 மில்லியன் £20 காகித நாணயத் தாள்கள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாக இங்கிலாந்து வங்கி மதிப்பிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பதிப்புகளால் மாற்றம்
இந்த நாணயத் தாள்கள் £5 மற்றும் £10 நாணயத்தைப் போலவே பிளாஸ்டிக் பதிப்புகளால் மாற்றப்படவுள்ளன. அவை அதிக நீடித்திருக்கும் என்பதுடன், போலி நாணயத் தாள்களை அச்சிடுவதும் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பெரும்பாலான காகித நாணயத் தாள்கள் தற்போது புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன, ஆனால் கணிசமான எண்ணிக்கையானது தற்போது புழக்கத்தில் இருக்கின்றது.
ஆகையினால் வீட்டில் £20 அல்லது £50 காகித நாணயத் தாள்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று இங்கிலாந்து வங்கியின் தலைமை காசாளர் சாரா ஜோன் தெரிவித்துள்ளார்.

வங்கியில் வைப்பிலிட முடியும்
ஒக்டோபர் முதல், இங்கிலாந்து வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்களின் கணக்கு அல்லது தபால் அலுவலகத்தில் £20 அல்லது £50 காகித நாணயத் தாள்களை வைப்பிலட முடியும். ஆனால் அவற்றைச் செலவழிக்க இயலாது.
Clydesdale Bank, Royal Bank of Scotland மற்றும் Bank of Scotland ஆகியவற்றால் வழங்கப்பட்ட காகித £20 மற்றும் £50 நாணயத் தாள்கள் அதே திகதியில் திரும்பப் பெறப்படும்.
பாங்க் ஆஃப் அயர்லாந்து, ஏஐபி குரூப், டான்ஸ்கே வங்கி மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள உல்ஸ்டர் வங்கி ஆகியவற்றால் வழங்கப்பட்ட காகித £20 நோட்டுகளும் செப்டம்பர் 30க்குப் பிறகு திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You My Like This Video
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam