யாழில் நிகழ்நிலை சட்டம் - பிரயோகமும் விளைவுகளும் எனும் தலைப்பில் கலந்துரையாடல்
நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் "நிகழ்நிலை சட்டம் - பிரயோகமும் விளைவுகளும்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (11.2.2024) காலை 09:30 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு பேச்சாளர்
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டிருந்தார்.
கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின்
முன்னாள் உறுப்பினர்கள், மத குருமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.