வெடுக்குநாறிமலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழு
வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று (11.02.2024) கொழும்பினை சேர்ந்த பெளத்த பிக்கு மற்றும் பெரும்பான்மையின மக்கள் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
இவர்களுடன் தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் இராணுவத்தினரும் உடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ பாதுகாப்புடன் சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் இது தங்களது இடம் என தெரிவித்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் நீண்ட நேரம் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது குறித்த குழுவினரின் கருத்தை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குழுவினர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் அருகில் பாதணிகளுடன் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
