யாழில் ஒன்லைன் மூலம் நிதி மோசடி: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வரும் நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நான்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.
நிகழ்நிலை செயலி
இந்த ஒன்லைன் மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது.
அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.
மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது.
பண மோசடி
பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன.
ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
