மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள் – மக்கள் அச்சத்தில்!
மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
10இற்கும் மேற்பட்ட வீடுகளில்
இதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 10இற்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீடுகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, கோவில் உண்டியல்களிலும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

