7 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது - இலங்கை கடற்பரப்பில் தொடரும் அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Indian fishermen Sri Lanka Navy Crime
By Ashik Nov 01, 2026 02:25 PM GMT
Report

புதிய இணைப்பு

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து உள்ளதாகவும், அவரை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடற்றொழிலாளரின் தாயார் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராமநாதபுரம் - ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று(31.10.2026) 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் முறைப்பாடு

இதன்போது, கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தங்கச்சி மடத்தை சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகையும் அதிலிருந்து பிளாசியஸ், அழகுபாண்டி, அந்தோணி பிச்சை, ரபீன், நெல்சன், அருளானந்த சேவியர் மற்றும் சகாய ஆனந்த் ஆகிய ஏழு கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

7 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது - இலங்கை கடற்பரப்பில் தொடரும் அதிரடி நடவடிக்கை | Ongoing Arrests In Sri Lankan Waters

அத்துடன், அவர்கள் கடற்றொழிலுக்காக பயன்படுத்தும் விசைப்படகையும் பறிமுதல் செய்து, கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுடன் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், படகுடன் அவர்களை மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் கடற்றொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள் என மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக, நடுக்கடலில் மீன் பிடிக்கும் காரைக்கால் கடற்றொழிலாளர்கள் இலங்கையின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுதொழில் கடற்றொழிலாளர்களின் நண்டு வலைகளைச் சேதப்படுத்தி வருவதாகக் கூறி, இலங்கை கடற்றொழிலாளர்கள் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளனர்.

மேலும், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முறைப்பாடு, தெரிவித்து வந்த நிலையில், இன்று(01) எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு விசைப் படகையும் ஏழு கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை திருப்பி அனுப்புமாறு கோரிய தாய்

இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பண்டிகைக்காக பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக தனது மகன் கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடலுக்குச் சென்ற தனது மகன் தற்போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது எனத் தெரியவில்லை.

7 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது - இலங்கை கடற்பரப்பில் தொடரும் அதிரடி நடவடிக்கை | Ongoing Arrests In Sri Lankan Waters

மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வரவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்யவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர் ஒருவரின் தாயார் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவை மீன்பிடி படகு ஒன்றுடன் 07 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று(01.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

7 கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது - இலங்கை கடற்பரப்பில் தொடரும் அதிரடி நடவடிக்கை | Ongoing Arrests In Sri Lankan Waters

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம்

மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம்

மாயமான மூன்று கடற்றொழிலாளர்கள் - தேடுதல் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை!

மாயமான மூன்று கடற்றொழிலாளர்கள் - தேடுதல் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை!



மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US