பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை!
பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்வத்த - மீட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் .
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 42 வயதுடைய குடும்பஸ்தர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படை
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் பதுங்கி இருக்கின்றார் என்று கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர் துப்பாக்கியால் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை நோக்கிச் சுட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் போது சந்தேகநபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் : தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam