கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை - 26 வயது சந்தேகநபர் தலைமறைவு
கம்பஹா - நித்தம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மருமகனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தலைமறைவு
நேற்று (10) மாலை நடைபெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 70 வயதுடைய முதியவர் என நித்தம்புவ பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த குற்ற சம்பவத்திற்கு பிறகு 26 வயது சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நித்தம்புவ பொலிஸ் தொடங்கியுள்ளது.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்