ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் திரைப்படம் ஒன்றுக்கான படப்பிடிப்பின் போது எதிர்பாராத வகையில் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் (Alec Baldwin) சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் (Halyna Hutchins) உயிரிழந்துள்ளார்.
ஹொலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் ரஸ்ட “Rust” என்ற திரைப்படம் உருவாகிவருகின்றது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் திரைப்படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடும் காட்சி நேற்றுமுன் தினம் படமாக்கப்பட்டது.
இதன்போது துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார்.
அத்துடன் இயக்குநர் ஜோயல் படுகாயம் அடைந்தார். ஜோயலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அலெக் பால்ட்வின் ’ரஸ்ட’ படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
முன்னதாக 1994ஆம் ஆண்டு 'தி கிரோ' "(The crow) படப்பிடிப்பில் சினிமா
துப்பாக்கியால் சுட்டதில் ப்ரூஸ் லீயின் மகன் பிரான்டன் லீ உயிரிழந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.