யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - சுதுமலைமலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது – 64) என்பவரே நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பிரதேச வாசிகள்
“மானிப்பாயில் இருந்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு 7.30 மணியளவில் வரும் போது எதிரே வந்த கார் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவு வண்டி குறித்த இடத்திற்கு வருகை தந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
நோயாளரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் அந்த நபரை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட நிலையில், மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
