காலி சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பியோட்டம்
காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று(02.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்து.
இவ்வாறு தப்பிச் சென்ற கைதி, அம்பலங்கொட, குளியாபிட்டிய, கலகொட பகுதியைச் சேர்ந்த அகம்போடி திலீபா சம்பத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுவரை தாண்டி தப்பியோடிய கைதி
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர், கொள்ளை குற்றச்சாட்டுகளின் பேரில் பாலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் தொடர்பாக, அவர் ஜூன்(22) முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று(02) காலை கைதிகள் பட்டியலைச் சரிபார்த்தபோது, இந்தக் கைதி சிறையின் பாதுகாப்புச் சுவரைத் தாண்டி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நபர் இதற்கு முன்னர் அங்குனகொலப்பலெஸ்ஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam