யாழில் கடுமையான நோய் காரணமாக ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.
சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
தாங்க முடியாத நோய்
இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அவரை மீட்ட உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
